உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.அன்றாட தேவைக்கான பொருட்களை கூட வாங்க பணமில்லையே என ஏழை, நடுத்தர மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், கோவையில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள், ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், தவிக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கே தேடிச் சென்று, உணவு வழங்கும் பணியில், சேவாபாரதி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தில் ஆதரவற்றோர், ஏழை மக்கள் என, தினமும் ஒரு லட்சம் பேருக்கு, ‘சேவாபாரதி’ அமைப்பு உணவு வழங்கி வருகிறது. இத்துடன், வீடுகள் தோறும் கபசுர குடிநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை வழங்கி வருகிறது
இந்த நிலையில் சேலம் மாவட்டம் கொளத்தூர் கண்ட பாலமலை சித்தேஸ்வரன் மலைப்பகுதியில் வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேலம் சேவாபாரதி, தேசிய சேவா சமிதி ஏற்பாட்டில் அரிசி, பருப்பு போன்ற கோவிட்-19 நிவாரண பொருட்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பொறுப்பாளர்களால் இன்று வழங்கினார்.

														
														
														
Leave your comments here...