நாம் தமிழர் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் எழுந்து ஓய்ந்தன. இந்த போராட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்ளிட்ட வட மாநிலங்களில் கலவரம் மூண்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

தமிழகத்திலும் சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அமைதியான முறையில் போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்தினர்.இந்நிலையில் என்ஆர்சி, சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின்போது அரசுக்கு எதிராக இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழைக்கும் வகையில் பேசியதாகவும் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமானுக்கு எதிராக இந்த தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.