டாஸ்மாக் கடைகளை திறந்தால் – மூட வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டம் – அர்ஜூன் சம்பத்

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் எனவும் மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில் – டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்! அனைத்து மாவட்டத்திலும் இந்து மக்கள் கட்சி வரும் 7ஆம் தேதி டாஸ்மாக் முன்பாக “சத்தியாகிரக அறப் போராட்டம்” நடத்தும் என கூறியுள்ளார்.