கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய திரிபுரா – முதல்வர் பிப்லப் குமார்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை 686 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 3 -ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரசின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தில் 2வது நபராக அடையாளம் காணப்பட்டவருக்கு நடந்த தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு நெகட்டிவ் ஆனதால் அவருக்கு நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை இதனால் எங்களுடைய மாநிலம் கொரோனா தொற்று இல்லாததாகிவிட்டது என முதல்வர் பிப்லப் குமார் தேப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


முதல்வர் பிப்லப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சமூக விலகலை பராமரிக்கவும் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். “திரிபுராவை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைத்த அனைத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அனைத்து முன்னணி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். சமூக விலகல் மற்றும் சரியான வழிகாட்டுதல்களைப் பேணுவதன் மூலம் இதைத் தக்க வைத்துக் கொள்ள எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.