குமரியில் கொரோனாவை ஒழிப்பதற்க்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஜெபக்கூடம் கட்ட முயற்சியா..? மருத்துவ கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்…!!

Scroll Down To Discover
Spread the love

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கோர தாண்டவமாடி வருகிறது. நேற்றைய நிலவரப்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 834 உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் உணவு வழங்குதலும் மற்றும் சுகாதார பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.இப்படி இருக்கையில் கொரானாவை ஒழிப்பதற்க்காக அரசு ஒதுக்கிய நிதியில் கிறுஸ்துவஜெபகூடம் கட்ட முயற்சி செய்யும் விதத்தில் நடந்துகொள்ளும் முதல்வரை விசாரித்து நடவடிக்கையெடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் இறைச்சகுளம் காளியப்பன் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில்:- குமரி மாவட்ட ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி அவர்கள் பொறுப்பேற்று முதல் கிறிஸ்தவ மதம் பரப்பும் செயல்ப்பாடுகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் இருந்த பழைய ஒட்டு கட்டிடம் ஒன்றை மருத்துவ கல்லூரி செலவிலேயே சீரமைத்து அதனை சர்ச ஆக மாற்றி வருகிறார்.

தற்போது அந்த கட்டிடத்தில் கிறிஸ்தவ பிரத்தனைகள் நடைபெற உள்ள ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்து ஏற்கனவே தகவல் வந்து. இது சம்மந்தமாக புகார் மனு அளித்துள்ளோம். ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக செயல்பட இருக்கும் சர்சினை தடைசெய்து இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதில் பாஜக மூத்த தலைவரும் மாநில துணை தலைவர் எம்ஆர்.காந்தி, நாஞ்சில் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்..