சர்ச் புனிதநீரால் 46 பேருக்கு பரவிய கொரோனா வைரஸ்..!

Scroll Down To Discover
Spread the love

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் உயிர்கொல்லி ‘கொரோனா வைரசால்’ மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 90 பேர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கொடுத்துள்ளனர்.


இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போகவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கரோனா பரவியது தெரிய வந்தது.

இது குறித்து பாதிரியார் கிம் கூறுகையில்- நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.