திருப்பூரில் பரபரப்பு..! இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது சரமாரி அரிவாள் வெட்டு..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் நந்தகோபால், 48. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளரான இவர் நேற்றிரவு, 9:45 மணியளவில் வீட்டின் அருகே டூவிலரில் சென்றபோது, இரு டூ வீலர்களில் பின்தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில், நந்தகோபாலின் உடலில் ஏழு இடங்களில் வெட்டு விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், பெருமாநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், திருப்பூரில் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பகவான் நந்து வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். திருப்பூர் மாவட்டமே பரபரப்பாக இருக்கிறது.

இது குறித்து இந்து கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளார்..!