எல்லை தாண்டி பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தயக்கம் காட்டுவதில்லை – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Scroll Down To Discover
Spread the love

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கிஸ்தான் கின் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்தது.

இது நடந்து ஓராண்டு ஆனதையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார் அதில்:- பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் மோடி தலைமையிலான அரசு மாற்றத்தை கொண்டுவந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவந்த மோடிக்கு நன்றி. 2016ம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் 2019ன் பாலகோட் வான்வழித் தாக்குதல்களே இதற்கு சான்றாகும். இந்த மாற்றத்திற்கு சான்றாகும். இது நிச்சயமாக ஒரு புதிய, நம்பிக்கையான இந்தியாவை உருவாக்கியுள்ளது.

இந்த மாற்றத்துக்கு துல்லியத் தாக்குதல், பாலாகோட் தாக்குதல் ஆகியவையே சான்று என்று கூறியுள்ள அவர், நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தயங்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.