ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

Scroll Down To Discover
Spread the love

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சி.ஐ.எஸ்.எப். வீரர்களுடன் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள மற்றோரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பிகில் திரைப்படத்திற்கு ஏ.ஜி.எஸ்., நிறுவனத்திடம் இருந்து விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.