சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தை சேர்ந்த 38 பேர் நாடு கடத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

உத்​தரபிரதேசம் : ஆக்ராவில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு குழந்தைகள் உள்பட 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்​தரபிரதேச மாநிலம் ஆக்ரா உதவி காவல் ஆணை​யர் (புல​னாய்​வு) தினேஷ் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு பிப். 5-ம் தேதி, ஆக்​ரா​வின் சிக்​கந்​திரா காவல் நிலை​யப் பகு​திக்​குட்​பட்ட செக்​டார் 15-ல் சட்டவிரோதமாக வங்​கதேசத்தை சேர்ந்த 38 பேர் சட்​ட​விரோத​மாக வசிப்​பது கண்​டறியப்​பட்​டது. இவர்​களில் 23 பேர் ஆண்​கள், 7 பேர் பெண்​கள், 8 பேர் சிறார்​கள் ஆவர். அவர்​கள் யாரிட​மும் செல்​லுபடி​யாகும் ஆவணம் எது​வும் இல்​லை.

இந்​தி​யா​வில் சட்​ட​விரோதமாக வசித்த குற்​றச்​சாட்​டு​களின் கீழ் அவர்​கள் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். அவர்​களுக்கு வெளி​நாட்​டினர் சட்​டத்​தின் கீழ் நீதி​மன்​றம் 3 ஆண்​டு​ தண்​டனை விதித்​தது.

இதைடுத்து 7 பெண்​கள் உள்​ளிட்ட 30 பேர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். 8 சிறார்​களும் குழந்​தைகள் இல்​லம் ஒன்​றில் தங்க வைக்​கப்​பட்​டு, பராமரிக்​கப்​பட்டு வந்​தனர்.

தற்​போது அனை​வரும் தண்​டனை காலத்தை நிறைவு செய்​து​விட்​டனர். எனவே இவர்​கள் 38 பேரும் வாக​னங்​கள் மூலம் வங்​கதேச எல்​லைக்கு சனிக்​கிழமை அனுப்பி வைக்​கப்​பட்​டனர். அவர்​கள் ஜனவரி 13-ம் தேதி எல்லை பாது​காப்பு படை​யிடம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள். இவ்​வாறு அந்த அதி​காரி கூறி​னார்​.