ரூ.1,000 பொங்கல் பரிசு.. வங்கிக்கணக்கில் வரவு – அரசு பரிசீலிக்க உத்தரவு

Scroll Down To Discover
Spread the love

பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும், ரூ.1000 ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம்.

கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தன