அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் உயர்வு..!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2,69,000-ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் இப்போது உலகம் முழுவதும் 240 நாடுகளில் படிக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்ய சபாவில் தெரிவித்தது.

இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில்கின்றனர். இதில் அமெரிக்காவிற்கு சென்று படிக்க அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு கல்வியாண்டில் அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, கல்விக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரின் பட்டியலில் 2,90,000 மாணவர்களுடன் சீனா முதல் இடத்திலும், 2,60,000 மாணவர்களுடன் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன.தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் தொடர்பான படிப்புகளுக்கே மாணவர்கள் அதிக விருப்பம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.