ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை ஹெலிகாப்டர் மூலம் வீசிய நபர் – வைரலான வீடியோ

Scroll Down To Discover
Spread the love

செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என்று அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார்.

இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார்.

இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசினார். அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.