ஞானவாபி மசூதி ஆய்வு – தொல்லியல் துறைக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம்..!

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 2021-ல் 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதைத் கண்டறியஅம்மசூதியின் வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்து. ஆய்வுப் பணி முடியாத நிலையில் கூடுதல் அவகாசம் வழங்க இந்திய தொல்லியல் துறை அனுமதி கோரியது. இந்நிலையில், தற்போது கால அவகாசம் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய தொல்லியல் துறை அதன் ஆய்வு முடிவை நவம்பர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.