இந்தியாவின் ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பதவி வகித்து வருகிறார்.அவரது பதவிக்காலம் வரும் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. தற்போது அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் புதிய தலைமைத் தளபதியாக  மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மனோஜ்  தற்போது லெப்டினனட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தின் 28- ஆவது புதிய தலைமைத் தளபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார் .  1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் தனது ராணுவ சேவையைத் தொடங்கிய மனோஜ் முகுந்த் நரவனே, தற்போது இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது