தலையில் தொப்பி வைத்தால் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? எடப்பாடி பழனிசாமி – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Scroll Down To Discover
Spread the love

தலையில் தொப்பி வைத்தால் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா பழனிசாமி? நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நவம்பர்-டிசம்பரில் முடிவெடுப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’விசுவாசமிக்க தொண்டர்கள்தான் ஒரு இயக்கத்தின் அச்சாணி. விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்(அதிமுக) எங்களை விமர்சிக்கிறார்கள். தலையில் தொப்பி வைத்தால் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா பழனிசாமி?அமைச்சராக இருந்தவர்கள் இப்போது கீழ்த்தரமாக பேசுகிறார்கள், பயந்து சாகிறார்கள், ஜெயக்குமார் எங்களை பற்றி பேசத் தேவையில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்த கட்சி இப்போது இருக்கிறதா?சின்னம் இருக்குற திமிரால் பணத்திமிரால் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.பன்னீர் செல்வம் சட்டப்படி நடக்கிறார். அவர் வழியில் செல்கிறார்.கட்சி வேண்டாம் என்று சொல்லி நான் தனிக்கட்சி தொடங்கி 6 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த கூட்டணியை நம்பியும் நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நவம்பர்-டிசம்பரில் முடிவெடுப்போம். காங்கிரசுடனும் கூட்டணி இருக்கலாம், பாஜகவுடனும் கூட்டணி இருக்கலாம். கூட்டணிக்காக பிற இயக்கங்களைச் சேர்ந்த சிலர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல முடிவு ஏற்பட்டால். சொல்கிறோம். தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம்’ என்று பேசினார்.