நாடாளுமன்ற தேர்தல் : வாக்கு இயந்திரங்களில் பாஜக தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைகளில் இருந்து காப்பாற்றும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்துக்கு முன்பு செய்தியாளர்கள் சந்தி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி கூறியதாவது:- இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அரசை அமைக்கும். இந்தியா கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அவர்கள் ஏற்கனவே திட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். மின்னணு வாக்கு இயந்திரங்களை அவர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களது முயற்சி குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற பல செயல்களில் அவர்கள் ஈடுபடுவர் என்றார்.