செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?- மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Scroll Down To Discover
Spread the love

சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

அதில், கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றதாகவும், இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அதிவேக இயக்கம், குடிபோதை, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

அதிவேகமாக சென்று 40 ஆயிரத்து 450 பேரும், செல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்தில் 1,040 பேரும் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.