அமர்நாத் யாத்திரை : யாத்திரைக்கு வரும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் – மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை..!

Scroll Down To Discover
Spread the love

அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை யொட்டி, ஜம்மு காஷ்மீரில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை( சி.ஆர்.பி.எப்) தெரிவித்துள்ளது.

இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது.

கடந்தாண்டு நடந்த யாத்திரையின் போது, உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால், 42 பக்தர்கள் இறந்தனர். இந்தாண்டு யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை அமர்நாத் யாத்திரை வாரியம் பிறப்பித்துள்ளது. அதேபோல் பக்தர்கள் கண்டிப்பாக அசைவ உணவு சாப்பிடக் கூடாது. மது, புகையிலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை யொட்டி, ஜம்மு காஷ்மீரில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை( சி.ஆர்.பி.எப்) தெரிவித்துள்ளது.