நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதி வெளியீடு – தமிழக அரசு

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது

இதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சிலர்களும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.