தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Scroll Down To Discover
Spread the love

ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ரவி பேசியதாவது: தமிழகம் அமைதி மாநிலம். இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சி. தமிழ் மொழி தொன்மை, தமிழர்களின் கலாசாரம் மிகுந்த வரவேற்பை அளிக்கிறது.ஒரு தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதனை நிராகரிப்பதாக தான் பொருள்.

அரசியலமைப்பின்படி, அரசியலமைப்பை காப்பதே கவர்னரின் கடமை.நாட்டின், காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதி வந்துள்ளது. பல பயங்கரவாத செயல்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐ.எஸ்., அமைப்பிற்கு சென்ற 90 நபர்களை இந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.இவ்வாறு கவர்னர் பேசினார்.