கோவை மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் நடந்த உலக சிறு தானியங்கள் மாநாட்டில், கோவையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளிடம், பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெற்றார்.

டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.