சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் பால் உற்பத்தி 10 அதிகரிப்பு – மத்திய உள்துறை அமித்ஷா பேச்சு.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.

குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக குஜராத்துக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் காந்திநகருக்கு சென்று 49-வது பால் பண்ணை ஆலையின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, 1970-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகை 4 மடங்கு அதிகரித்து உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், நமது பால் பண்ணை பிரிவால் பால் உற்பத்தியானது 10 மடங்காக பெருகி உள்ளது. நமது பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 12.6 கோடி லிட்டர் ஆகும். இது உலக அளவில் அதிகம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பால் பண்ணை பிரிவு செயலாற்றி உள்ளது.

பால் பண்ணை நிறுவனம் பெரிய அளவில் பங்காற்றி உள்ளதுடன், ஏழை விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆத்மநிர்பார் ஆக உருமாறவும் உதவி செய்து உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பால் பண்ணை பிரிவானது ஒரு முக்கிய அம்சம் வகிப்பதுடன், ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு பங்காற்றி உள்ளது. இந்த பால் பண்ணை அமைப்புடன் 45 கோடி மக்கள் தொடர்பில் உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.