இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது- பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா உறுதி.!

Scroll Down To Discover
Spread the love

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.

2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார் ஆனால் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட போட்டி தொடரை நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.