மறைந்த பாஜக நிர்வாகி குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த குமரி பாஜக – பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி நல்லூர் பேரூராட்சியை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சந்திரகாந்தன்(எ) பிரிண்ஸ் அவர்கள் இரண்டு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரை இழந்த அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியிருந்தது. மேலும் அவரது குடும்பம் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தது. இதனை கண்ட நல்லூர் பேரூராட்சி பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மறைந்த சந்திரகாந்தனின் குடும்பத்திற்கு புதிதாக வீடு கட்டி பரிசாக வழங்கியுள்ளனர்.

இந்தப் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்தப் புதிய வீட்டிற்கு தாமரை இல்லம் என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் மாநில பாஜக OBC அணி செயலாளர் சிவபாலன், குமரி மாவட்ட கிள்ளியூர் ஒன்றிய பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

– Tharnesh -H