கோரிக்கையை நிறைவேற்றாத நகராட்சி ஆணையர் – முகத்தில் கருப்பு மை ஊற்றிய பெண்கள்..!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திராவில் நகராட்சி ஆணையர் மீது பெண்கள் மை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி நகரில் ராஜாபேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் கசிவு ஏற்படுவதாகவும் அதை சீரமைக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் மக்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் பிரவீன் அஷ்டிகார் அப்பகுதியில் சாலைப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மூன்று பெண்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்பு மையை நகராட்சி ஆணையர் முகத்தில் வீசினர். இதனால் அவரது முகம் முழுவதும் கருப்பாக மாறியது. இதையடுத்து போலிஸார் அதிகாரியை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். நகராட்சி அதிகாரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.