கபடி போட்டியில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை..!

Scroll Down To Discover
Spread the love

நேரு யுவகேந்திரா, மதுரை மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாடிப்பட்டி அரசு மேனிலைப்
பள்ளியில் நடைபெற்றது. 10 பள்ளிகள் பங்கு பெற்றன.

இதில், சோழவந்தான் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கபடி விளையாட்டு போட்டியில், மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்றனர். கோபிகா என்ற மாணவி, நீளம் தாண்டுதலில் இரண்டாம் பரிசையும்,  கார்த்திக் என்ற மாணவன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசையும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் செயலர் சுவாமி வேதானந்த,  பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர்.