டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக மீண்டும் தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு..!

Scroll Down To Discover
Spread the love

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள என்.சந்திரசேகரன் பணிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் டாடா குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாடா தலைமையிலான உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் மிகவும் சிறப்பாக இயங்கியதால் அடுத்த 5 வருடம் இப்பதவியில் பணியாற்ற டாடா குழுமத்தின் உயர் மட்ட நிர்வாகக் குழு, டாடா டிரஸ்ட் நிர்வாகக் குழு, டாடா டிரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா உட்பட அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.