விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் ரோடு பழைய பேருந்து நிலையம் ,பஞ்சு மார்க்கெட் போன்ற பகுதிகளில் வீட்டில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு மாடுகள் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துக் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும், அப்போது விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்களில் பலருக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது.
இதுகுறித்து, இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில், வட்டாட்சியர் ராமச்சந்திரன் நள்ளிரவில் வீதிகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் உதவியுடன் 50க்கு மேற்பட்ட மாடுகளை பிடித்து லாரிகளில் ஏற்றி கோசாலை கொண்டு செல்லப்பட்டன.

இந்த தகவல் இருந்து அறிந்து வந்த மாட்டு உரிமையாளர்கள் வட்டாச்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாடுகளை பிடித்தவுடன் வரும் நீங்கள் மாடுகளை என் வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை என கூறி அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி எச்சரித்து மாடுகளை கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி : Madurai -RaviChandran

														
														
														
Leave your comments here...