உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் : விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய நாசா!

Scroll Down To Discover
Spread the love

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக அமெரிக்காவின் நாசா , ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற கண்காணிப்பு டெலஸ்கோப்பை உருவாக்கியுள்ளது.நேற்று (டிச.24-) விண்ணில் செலுத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.


இன்று (டிச.25) பிரான்ஸின் கயானாவிலிருந்து ஐரோப்பிய ‘ஏரியானா 5’ ராக்கெட்டைக் கொண்டு விண்ணில் வெற்றிகராக ஏவப்பட்டது.ராக்கெட்டிலிருந்து வெளியே வந்த 30 நிமிடங்களுக்குள் வெப் டெலஸ்கோப் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும் இதற்கு 30 நாள்கள் வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்டை விட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்னும் நமக்கு தெரியாத விண்வெளி அதிசயங்கள் பற்றியும், பிரபஞ்சத்தின் தன்மை பற்றியும் மிகத் தெளிவாக ஆராயும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.