ராமலிங்கம் கொலை வழக்கு -தகவல் தெரிவித்தால் 5 லட்சம் பரிசு தருவதாக என்.ஐ.ஏ., அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் குறித்து தகவல் அளித்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என, என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், 2019 பிப்ரவரி 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின், இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் திருப்புவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37, கும்பகோணம், மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 40, வடக்கு மாங்குடியை சேர்ந்த புர்ஹானுத்தீன், 31, திருவிடைமருதுாரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீத், 30, திருமங்கலக்குடியைச் சேர்ந்த நவுபில் ஹாசன், 31 ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. தலைமறைவான, ஐந்து பேரையும் என்.ஐ.ஏ., தேடி வருகிறது.

இந்நிலையில், ஐந்து பேரின் புகைப்படங்கள், அடையாளங்களை அச்சடித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் என்.ஐ.ஏ., போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், மேற்கண்ட நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.