11 மாதங்களுக்கு பின் மீண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அழைத்து வரப்பட்ட தெய்வானை யானை..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இரண்டு பாகங்கள் நியமிக்கப்பட்டு பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வருடம் 24.05.20திடீரென யானை தெய்வானைக்கு மதம் பிடித்து காளீஸ்வரன் தாக்கியது. இதில், பாகம் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், யானை இங்கிருந்து (01.06.20) அன்று திருச்சி அருகே உள்ள யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு கால்நடை துறை சார்பில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு 8 மாதத்திறகு பின் 02.02.21 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கால்நடை துறை சார்பில் தீவிரமாக பராமரித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை பாகங்கள் மற்றும் கால்நடை மருத்துவர் உதவியுடன் , மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து நடைபயணமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.