மேலூர் அருகே வியப்பு: நாயும் பூனையும் தோஸ்த்..!

Scroll Down To Discover
Spread the love

மேலூர் அருகே நாயும் பூனையும் கொஞ்சி மகிழ்வது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகின்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூைரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் வளர்க்கும் நாயும் பூனையும் ஒன்றோடு ஒன்று கொஞ்சி மகிழ்வதும், நாய் தனது வாயின் மூலம் பூனையின் தலையை கவ்வி விளையாடுவதும் பார்ப்பவர் மனங்களை பயத்தில் ஆழ்த்தினாலும், இவை நட்பின் ஆழ்ந்த உறவை பிரதிபலிப்பதாக உள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .பொதுவாக நாய்க்கும் பூனைக்கும் ஏழாம்பொருத்தம் என்பார்கள் அந்த வகையில் நாயும் பூனையும் எதிரிகளாக பார்க்கப்படும்.

இச்சூழலில் மேலூர் அருகே சுவாரஸ்ய நிகழ்வாக கம்பூரில் சிவலிங்கம் என்பவர் வளர்க்குக் பெண் நாயும் அவர் வளர்க்கும் பெண் பூனையும் ஒன்றோடு ஒன்று வீட்டில் கொஞ்சி குலாவி விளையாடி மகிழ்கிறது. மேலும் செல்ல சண்டையிட்டு அன்பை வெளிப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்துகிறது.