பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஏழைகளுக்கு 4,48,955 வீடுகள் மத்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன..!

Scroll Down To Discover
Spread the love

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4,48,955 வீடுகள் ரூ.6,654.35 கோடி மத்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துபூர்வமாகஅளித்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் கடந்த 2015-16ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள மொத்த வீடுகள் ஆண்டு வாரியாக கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2020-21ம் நிதியாண்டில் 1,20,719 வீடுகளும், புதுச்சேரியில் 2,820 வீடுகளும், 2021-22ம் நிதியாண்டில் தமிழகத்தில் 26,888 வீடுகளும். புதுச்சேரியில் 394 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக தமிழகத்துக்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.1,612.08 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 49.75 கோடியும்,2021-22ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.707.94 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 8.36 கோடியும் மத்திய நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.