சபரிமலை ஐயப்பன் கோயிலில் ‘கூகுள்-பே’ வழியாக காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம்..!

Scroll Down To Discover
Spread the love

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதற்காக சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் ‘கூகுள் பே’ செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையை, தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு செய்துள்ளது. QR Code பலகைகளும், தொடர்பு எண் பற்றிய பலகைகளும் கோயிலின் உள்ளே சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலக்கல் உட்பட 22 இடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

வரும் நாள்களில் இந்தப் பலகைகளை சபரிமலைக்கு செல்லும் பாதைகளிலும், பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்துள்ளார். மேலும் “இந்த இணைய வழி காணிக்கை வசதி, பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.