செங்கல்பட்டு மாவட்டம் அழகாபுத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இதில் செங்கல்பட்டு மண்டல இயக்குனர் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்.
நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு அதில் வரும் மக்காத குப்பைகள் ஆன பிளாஸ்டிக்உட்பட்ட பொருள்களை சேகரித்து விற்பனை செய்யப்படுகிறது இதில் வரும் வருவாயை சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.

இப்படி ஆண்டு முழுவதும் சேமித்த வருவாயை தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்குமற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படும் இதேபோல் இந்த வருடமும் தீபாவளி முன்னிட்டு மொத்தம் 250 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு மண்டல இயக்குனர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார் உடன் பொறியாளர் (பொறுப்பு) ஆணையர் சுகாதார ஆய்வாளர் பணி மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

														
														
														
Leave your comments here...