டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ராஜஸ்தான் ஆசிரியை கைது

Scroll Down To Discover
Spread the love

‘டி – 20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக நம் அண்டை நாடான பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

டி – 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் இந்தியாவை, பாக்., வென்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நபீசா அட்டாரி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டார்.

இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்து பள்ளி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல்கலையில் படிக்கும் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர். அதையடுத்து அவர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது ஆக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.