ராணுவ வீரரை வரவேற்று சான்றிதழ் வழங்கிய மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பாக இந்திய ராணுவ வீரர் பாலமுருகனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திய இராணுவ வீரர் பாலமுருகன் அசாம் இராணுவ பிரிவில் சேவையாற்றுகிறார். இவர் தனி ஒருவராக ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியை தள்ளுவண்டி மூலம் 120கிலோ எடையுடன் 2800 கிலோமீட்டர் நடைபயணமாக செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோணா வைரஸ் அதிகரித்த காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள்,
மாநில முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைத்து துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு வழங்குகிறார். இதன்படி மதுரை வந்த அவரை பாராட்டும் விதமாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் நகர்ப்புற வீடற்ற முதியோர் இல்லத்தில் இராணுவ வீரருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவரை பாராட்டும் விதமாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் இராணுவ வீரர் பாலமுருகனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசுகையில்:

இந்திய இராணுவ வீரர்களின் தியாகங்கள் எல்லை பாதுகாப்பில் மட்டுமல்லாது நாட்டு மக்களின் பல இக்கட்டான காலகட்டங்களில் அறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பேரிடர் காலத்திலும் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கினர். அதன் ஒருகட்டமாகவே இராணுவ வீரர் பாலமுருகன் சவாலான இந்த நன்றி தெரிவிக்கும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கிறார். அவரது சாதனை பயணம் உரிய காலத்தில் இலக்கை அடைய வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்ங்குகிறோம் என்றார். தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு செய்து விழிப்புணர்வு வாகனத்துடன் சிம்மக்கல் சாலையில் ஊர்வலமாக சென்று வழியனுப்பினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், சுவாமிநாதன், மாயகிருஷ்ணன், மஸ்தான், நஜூமுதீன் துரைவிஜய பாண்டியன், செந்தில்குமார், பாலமுருகன்,கிரி,சுபாஷ், இளவரசன்,கார்த்திக், பெரியதுரை, இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ், முதியோர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி : ரவிசந்திரன்