இந்திய விமானங்களுக்கு தடை நீக்கம்; இன்று முதல் பயணிகள் வருவதற்கு கனடா அரசு அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சம் அடைந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் கனடா வர தடை விதிக்கப்பட்டிருந்தது அந்தத் தடையை செப்டம்பர் 27ம் தேதி (இன்று) நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா-கனடா இடையிலான விமான சேவைக்கு, 5 மாதங்களுக்குப் பிறகு கடனா அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால், ஏப்ரல் முதல் விமான சேவைக்கு தடை விதித்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமானங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கனடா வரும் பயணிகள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.