நடிகை ஷில்பா ஷெட்டி கணவரின் செல்போனிலிருந்து ரூ.9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தராவிடம் ரூ.9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் ராஜ் குந்த்ரா மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பின்னர் குந்த்ராவுக்கு சமீபத்தில் மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனையடுத்து தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.