பாதுகாப்பு காரணம் ; சல்மான் கானை தடுத்து நிறுத்திய அதிகாரிக்கு பாராட்டு – சி.ஐ.எஸ்.எப் விளக்கம்

Scroll Down To Discover
Spread the love

மும்பை விமான நிலைய முனையத்திற்குள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எப்., வீரருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைப் நடிக்கும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த சல்மான் கான், விமான நிலைய முனையத்திற்குள் செல்ல முயன்றார்.

ஆனால், அங்கு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து நிறுத்தினார். பாதுகாப்பு சோதனைகளை நிறைவு செய்து ஒப்புதல் பெறும்படி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின.


இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ” சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லை. உண்மையாக கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது,”. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.