திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள தர்கா கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல்.!

Scroll Down To Discover
Spread the love

திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள தர்கா கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி இணைந்து ஹார்வி பட்டியில் சாலைமறியல் போராட்டம் செய்தனர்.சாலை மறியலில் 25 பெண்கள் உள்பட 125 பேர் கலந்து கொண்டனர்

திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் கோவில் மலை மேலுள்ள சிக்கந்தர் தர்கா உள்ளது. இங்குள்ள கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரை சேர்ந்த 125 பேர் ஹார்வி பட்டியில் திடீரென சாலை மறியல் செய்தனர்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் தடையை மீறி திடீரென சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்ததால் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

செய்தி: RaviChandraN