கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

ஜூன் 21ம் தேதி 7 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திப்பதாக கூறினார்.

யோகா குறித்து அவர் மேலும் பேசியதாவது, ‘ஜூன் 21ம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‛ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள்.

அனைவரும் உடல் நலம் மற்றும் மனநலம் பெற வாழ்த்துகிறேன். கோவிட் நேரத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. கோவிட் தொற்று நம் அனைவரையும் யோகாவை மறக்கச் செய்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியான கோவிட்டை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும்.

யோகா நமக்கு உள் வலிமையை கூட்டுகிறது. உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் அடிப்படை நோக்கமாக யோகா கொண்டுள்ளது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராட உதவுகிறது


தெய்வப் புலவர் ‛திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல்’ இத்திருக்குறள் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

முன்பு போல் யோகா நிகழ்ச்சிகள் தற்போது கோவிட் காரணமாக நடத்தப்பட முடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் யோகாவை தங்களின் பாதுகாப்பு ஆயுதமாக கடைப்பிடித்து வந்தனர். யோகா பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நம் முன்னோர்களும், சாதுக்களும் யோகாவை ஆரோக்கியத்தின் அளவீடாக கருதி வந்தனர். நாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம் நாம் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும். யோகா செயலியின் மூலம் இது உலகம் முழுவதும் பிரபலமடையும்’. இவ்வாறு மோடி கூறினார்.