கொரோனா பரவல் : பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணி- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவல் காரணமாக குழந்தை பெற்றுள்ள பாலூட்டும் தாய்மார்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தற்போது பரவி வரும் கொரோனா தொற்று நோய் தாக்குதலில் பாலூட்டும் தாய்மார்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பது, அவர்களையும் குழந்தைகளையும் தொற்று நோயில் இருந்து பாதுகாக்க உதவும். மேலும் அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் உதவும்.அவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.