முல்லை பெரியாறு பாசன கால்வாய் சுத்தம் செய்வதில் பொதுப்பணித்துறையினர் மெத்தனம்

Scroll Down To Discover
Spread the love

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற 4ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி பாசன வசதி பெறும் அலங்காநல்லூர் பகுதியில் பிரதான கால்வாய்கள் மற்றும் துணை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வசதி பெறும் விவசாயிகள் ஒருபுறம் துணை கால்வாய்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் பாசன வசதி பெரும் துணை கால்வாய் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கிடப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் மன வேதனை தெரிவித்தனர். எனவே பொதுப்பணித்துறையினர் முறையாக சுத்தம் செய்து கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

செய்தி: Ravi Chandran