கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இங்கு மிகவும் பிரபலமான மாசிப் பெருந்திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதம், பெண்கள் பொங்கலிட்டு வழிப்படுவதும் சிறப்பு. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை வரை பரவியது. இதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் பொதுமக்களும், தீயணைப்பு துறை வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
முன்னதாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் தீபாராதனை நடைபெற்றது. அந்த தீபத்தில் இருந்து எழுந்த தீ தான் தீவிபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
https://twitter.com/MRGandhiNGL/status/1399945665522802690?s=20
மேலும்  தீ விபத்து குறித்து நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
செய்தி : Harish

														
														
														
Leave your comments here...