மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம்

Scroll Down To Discover
Spread the love

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசாவில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வந்தது. இந்த புயல், மேலும் வலுவடைந்து, அதிதீவிர புயலாக மாறி, ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் கரையை கடந்தது.

இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், புயல் நேரத்தில் திகா நகரில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் உயிரிழந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தை தடுக்க அமைக்கப்பட்ட 134 சுவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த புயல் காரணமாக ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரூ.10 கோடி அளவு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட உள்ளேன். கள ஆய்வுக்கு பின்னர், சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.