அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் – சீர்மரபினர் தன்னைத் தானே செருப்பால் அடித்து நூதன போராட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செக்கானூரணி தேவர் சிலை முன்பாக சீர்மரபினர் நலச் சங்கத்தினர் டி என் டி சான்றிதழ் வழங்க கோரிகடந்த கடந்த 40 ஆண்டுகளாக அதிமுகவிற்கு அளித்து வந்த ஆதரவிற்கும் வருத்தம் தெரிவித்து வாக்களித்த தங்களை தாங்களே செருப்பால் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவர்கள் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளித்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எங்களை உள்ளடக்கிய 68 இனத்திற்கு டி என் டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தாங்கள் ஓட்டளித்த கைகளையும் செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: Ravi Chandran