புகார் கொடுத்த பெண் – லஞ்சமாக பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்த போலீஸ் அதிகாரி கைது

Scroll Down To Discover
Spread the love

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு பெண் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் அதிகாரியாக போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ரா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து அதிகாரியிடம் புகார் அளித்த பெண் கேட்டுள்ளார். ஆதரவாக விசாரணை நடத்த வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கைலாஷ் கேட்டுள்ளார். அதனை கொடுக்க மறுத்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

இதற்காக அந்த பெண்ணை தன் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ், டி.ஜி.பி.,யிடம், அந்த புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கைலாஷ் போஹ்ராவை கைது செய்தனர்.