மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியை சுற்றியுள்ள திடியன், நாட்டாபட்டி, சக்கிலியங்குளம் உள்ளிட்ட கிராமபுறங்களில் வசிக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே சுயல்தொழில் செய்வது, எந்ததெந்த சுயதொழில்கள் பன்னலாம் மற்றும் குறைந்த செலவில் சுயதொழில் ஈட்டுவது, காளான் வளர்ப்பது குறித்து மதுரை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்திற்கே நேரடியாக சென்று பெண்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.
மேலும் அந்த பகுதியில் நடைபெற்று வரும் நெல் நடவு பணிகளையும் விவசாயிகளிடையே களப்பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விவசாயிகளிடம் நெல்நடவு நாட்கள், அறுவடை நாட்கள், உரம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தூவுவது. பூச்சிமருந்து தெளிப்பது உள்ளிட்டவைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் , கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகளிடையே களப்பணி மேற்கொண்டனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...